Home
News
ஆர்ப்பாட்டம் செய்த 46 பெ.தி.கவினர் கைது
பாண்டிச்சேரியிலிருந்து மாகி செல்லும் தொடர்வண்டியை கோவை சந்திப்பு வழியாக இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த 46
பேர் பொதுச்செயலாளர் கோவை.
இராமகிருட்டிணன் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாண்டிச்சேரி -
மாகி தொடர்வண்டியானது கோவை புறநகரிலுள்ள போத்தனூர் தொடர்வண்டி நிலையம் வழியாக செல்கிறது.
இது பொதுமக்கள் பலருக்கு சிரமத்தினை ஏற்படுத்துகிறது.
எனவே பாண்டிச்சேரி மாகி தொடர்வண்டியினை கோவை சந்திப்பு தொடர்வண்டி நிலையம் வழியாக இயக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.
ஆறுச்சாமி உட்பட 46
பேர் கோவை தொடர்வண்டி நிலையம் முன்பாக இன்று (19.01.2010)
மாலை 5
மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர்.